சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கருநாவல்குடி. இந்தப் பகுதியில் அறந்தாங்கி செல்லும் பிரதான சாலையில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சீரமைத்தல் என்ற பணிக்காக ரூபாய் 0.86லட்சம் என்ற மதிப்பீட்டில் செலவிட செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் எவ்வித பராமரிப்பு இன்றி கதவுகள் சிதலமடைந்து, தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் சிலர் நம்மிடம் தெரிவிக்கும் போது, எங்களுக்குத் தெரிந்து இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை என்றும், அரசு பணத்தை செலவினம் செய்வது போல், ஊராட்சி அலுவலகத்தில் தங்கள் பைகளில் கல்லா கட்டிக் கொள்வதாக தெரிவித்தனர், நாமும் உட்பகுதி சுற்றுப்புற பகுதிகளில் சுற்றி பார்த்தபோது, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்பட்டது போல் எவ்விதமான அடையாளங்களும் இல்லை.
சுகாதார வளாகத்தின் உள்பகுதியில் உள்ள கழிவறைகளின் கதவுகள் பெயர்ந்த நிலையிலும், தண்ணீர் தொட்டி பழுதடைந்த நிலையிலும், அதுபோன்று கழிவறைகளின் உட்பகுதியில் சிமெண்ட் உடைகள் கற்களாக காட்சியளிப்பதோடு, சில சுண்ணாம்பு மூடைகள் இருப்பதும் தெரியவந்தது , எது எப்படியோ அரசு சொத்துக்களை அரசு அலுவலர்கள் பாதுகாப்பது முக்கிய பணிகளின் கடமையாகும், ஆனால் அவர்களே ஆட்டைய போடு நிலை இருப்பது கண்கூடாக தெரிகிறது, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் கோரிக்கை வலுத்து வருகிறது.


0 Comments