திருப்பத்தூர் அருகே திருவிழா நடத்த பாதுகாப்பு வேண்டியும் பிரிவினை செய்யும் இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம மக்கள் கோரிக்கை


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் ஸ்ரீ பரனாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது 400 ஆண்டு பழமை வாய்ந்தது. இத்திருவிழாவிற்காக இக்கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசி வாரத்தில் விரதம் இருந்து இவ்ஊரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்  வனப்பகுதிக்கு சென்று மார்கள் என்று அழைக்கப்படும் செடிகொடிகளை சேகரித்து வந்து அதன் மூலமாக கட்டிடம் போன்ற மாதிரி வடிவில் கோவில் வடிவமைக்கப்பட்டு அதில் மின்சாரமின்றி தீப்பந்தத்தை மட்டுமே விளக்காக வைத்து மிகவும் பக்தி யோடு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இவ்விழாவிற்காக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் ஆதிதிராவிடர், நகரத்தார், மற்றும் இங்கு வசிக்கக்கூடிய ஏனைய அனைத்து சமுதாய மக்களால் ஒற்றுமையோடு நடத்தப்பட்டு வருகிறது. இப்படி நடைபெறும் திருவிழாவில் இருவர் பிரச்சனை செய்வதாக கிராம மக்கள் ஒன்று கூடி திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக விழா காலங்களில் இக்கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் பாரம்பரிய முறைக்கு மாற்றாக திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒற்றுமையோடு வாழும் எங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளரிடமும்,  திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இடமும் மனுக்கள் அளித்துள்ளோம். எனவே சாதி மத பேதமின்றி ஒற்றுமையோடு இருக்கும் எங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை சீர்குலைத்து இடையூறு தரும் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து சென்றனர்.

Post a Comment

0 Comments