பங்குனி மாத பூஜை..... சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

 


தமிழ் மாதத்தின் 'பங்குனி' மற்றும் மலையாள மாதத்தின் 'மீனம்' மாதங்களின் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று (மார்ச் 15) முதல் அடுத்த 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, ‘பங்குனி உத்திர திருவிழா’வுக்காக மார்ச் 22 ஆம் தேதி மாலை சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படுகிறது. மறுநாள் 23 ஆம் தேதி, பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்தோடு பக்தர்கள் தரிசனம் நடக்கும்.

மாதாந்திர பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

Post a Comment

0 Comments