நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா களமிறங்கியுள்ளார். கடந்த ஓர் ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் அறிவிப்புகள் வெளிவர உள்ள நிலையில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கான தலைமை நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கீழ்வேளூர் அரசாணி குளம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் வேட்பாளர் கார்த்திகா திறந்து வைத்தார் முன்னதாக வேட்பாளர் கார்த்திகா விவசாயி சின்னத்தை குறிக்கும் வகையில் தலையில் விவசாயி போல் முண்டாசு கட்டிக் கொண்டு ஏர்கலப்பை கையில் ஏந்தி மேள தாளங்கள் முழங்க அரசாணி குளத்தில் இருந்து கட்சி அலுவலகம் வரை நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கீழ்வேளூர் மாவட்ட செயலாளர் பழனிவேல் ராவணன் அம்பேத்கர் கமல் ராஜ் தமிழ்ச்செல்வன் ஜாக்குலின் உதய ஜோதி வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




0 Comments