நாகை: பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டல்

 


நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சாங்குப்பம் கீரைக்குள்ள தெரு சேவா பாரதி மீனவர் குடியிருப்புப் பகுதியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ. 8.58 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு  பெரிடர் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.ஆகாஷ். இ. ஆ. ப. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.



 பின்னர் மாவட்டஆட்சி தலைவர் தெரிவித்ததாதவது பொதுமக்கள் நீண்ட கால தேவையாக இருந்தது பல்நோக்கு பேரிடர் மையம் அடிக்கல்  நாட்டுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் மக்களின் உரிமையும் உடமைகளையும் பாதுகாப்பதின் அரசின் மிக முக்கிய முன்னுரிமை ஆகும் பருவமழை மற்றும் புயல் காலங்களில் கடலோர ப் பகுதி மக்கள் எதிரொலிக்கும் சிரமங்களை குறைக்க இந்த பல்நோக்கு பேரிடர் மையம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் அவசர காலங்களில் பொதுமக்களுக்கு புலனாகவும் பாதுகாப்பு அறனாகவும் இயற்கை சீற்றங்களில் வரும்போது நாம் கட்டும் எச்சரிக்கை தான் பல உயிர்களையும் உடைமைகளையும் காக்கும் அரணாக அமையும் பெருமலை வெள்ளம் அல்லது புயல் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இது பயன்படுத்தப்படும் இப்பணிகள் விரைந்து முழுமையாக முடிக்கப்படும் அதனைத் தொடர்ந்து கீச்சங்குப்பம் பகுதியைச் பொதுமக்கள்.604 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா மாரிமுத்து தமிழ்நாடு அரசு மீனவ நலவாரிய கோ. மனோகரன் அரசு அலுவலகர் மற்றும் கீச்சாங்குப்பம் சேவா பாரதி  பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் எல்.கலைச்செல்வம் சேவா பாரதி



Post a Comment

0 Comments