திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தமிழ் கொரஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன . இவர்கள் கடந்த காலங்களில் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொருள்களை கொரஞ்சூர் பகுதியில் இருக்கும் கடையில் வாங்க வேண்டிய சுழ்நிலை இருந்தது இதற்கிடையே இவர்கள் வசிக்கும் பகுதியின் தற்காலிக ரேஷன் கடை திறக்கப்பட்டது சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார் இதில் வார்டு உறுப்பினர் ரவி வர்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


0 Comments