ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

                               


தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசையும் அதன்  கூட்டணிகட்சிகளையும் கண்டித்து தமிழ்நாடெங்கும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சட்டமன்றதொகுதியில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர்  ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார்.இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் அனைவரும்  கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை  இதனால் பொதுமக்கள்  பாதிப்பு  ஒன்றியஅரசுக்கு  தெரியலையா உடனடியாக கேஸ்சிலிண்டரை வழங்கு போன்ற கோஸங்கள் எழுப்பப்பட்டன இதில் ஏராளமான மகளிர் அணியினரும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments