ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நாராயணபுரம் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமுக ஆர்வலரும், தன்னம்பிக்கை ஆர்வலருமான சிவசுப்பிரமணி 80 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். மேலும் நல்லொழுக்க வாழ்க்கை வாழ்வது குறித்து எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையான கருத்துக்களை வழங்கி, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஞானக்கனி ஆசிரியர்கள் அந்தோனி ஆரோக்கிய பிரபாகர், ராஜேஸ்வரி, ராஜா, சகுபர் சாதிக், முத்துராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சமூக ஆர்வலர் முகம்மதுஹபீப், நீர்பாசனத்தலைவர் இராச்சந்திரன், ஆசிரியை செல்வராணி,அங்கன்வாடி பணியாளர்கள் பாலகோகிலா, தேவி ஆகியோர் செய்திருந்தனர்.

0 Comments