ராமநாதபுரம்: புதுமடத்தில் கணினி ஆய்வகம் உபகரணம் அர்ப்பணிப்பு விழா



 ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அரசு மேல்நிலை பள்ளியில் கணினி ஆய்வகம் அர்ப்பணிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் NAV டிரஸ்ட்(எவரெஸ்ட் ஜூவல்லரி, இராமநாதபுரம்) இதன் அனைத்து செலவினத்தையும் இந்த அறக்கட்டளை பொறுப்பேற்று செய்து தந்துள்ளார்கள். இந்த அர்ப்பணிப்பு விழாவிற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கியதோடு வரவேற்புரையும் நிகழ்த்தினார். 

 இந்த கணினி ஆய்வகம் அமைவதற்கு பெரிதும் முயற்சி செய்த மற்றும் முன்னிலை வைத்து ஒருங்கிணைத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பைத்துல்மால் நிர்வாகிகள், ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு NAV அறக்கட்டளை (எவரெஸ்ட் ஜூவல்லரி) நிர்வாகத்தினரை பாராட்டி, நன்றியையும் தெரிவித்தனர்.SDPI கட்சியின் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Post a Comment

0 Comments