உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்

 


உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-

1. பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாகதேவி, உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சந்தோஷ் குமாருக்கு, பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ரூபேஷ் குமார் மீனாவுக்கு, குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments