பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் பெண்களின் பாதுகாப்பிற்கென மகளிர் சிறப்பு காவல் உதவி மையம் திறப்பு



பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். காலை மாலை நேரங்களில் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்லும் சமயத்தில் புள்ளிங்கோ கூட்டத்தினர் சாகசங்களில் ஈடுபட்டு மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெண்களின் பாதுகாப்பிற்கென பிரத்தியேகமாக மகளிர் சிறப்பு காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.



 இந்த மகளிர் காவல் உதவி மையத்தின் திறப்பு விழா வான வேடிக்கைகளுடன் சிலம்பம் யோகா, கலையுடன் பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் மத்தியில் உற்சாகமாக நடைபெற்றது. பொன்னேரி சரக காவல் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் ஆய்வாளர் தமிழன்பன். மகளிர் ஆய்வாளர்  பொன்சித்ரா, திருப்பாலைவனம் ஆய்வாளர்  அகிலன்ராஜ், காட்டூர் ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி  திறப்பு விழாவில் கலந்து கொண்ட  பெண்களே ரிப்பன் வெட்டி மகளிர் காவல் உதவி மையத்தை திறந்து வைத்தனர். 



தொடர்ந்து மாணவிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள 12 சிசிடிவி கேமராக்களின் பயன்பாடுகளையும் அவற்றின் துல்லியத்தனமை குறித்து உதவி காவல் ஆணையர் பார்வையிட்டு அது தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார். இந்த மகளிர் காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் காவல் உதவி மையம் தமிழகத்தில் முதல் முறையாக பிங்க் கலரில் உள்ளது  மேலும். உதவி மையத்தினுள் நூலகம்  அமைக்கப்பட்டுள்ளது பெண்கள் குழந்தைகளின் அவசர உதவி எண்கள்,181, 1091,1098, பொன்னேரி காவல் நிலைய உதவி எண் 9498100337. தெரிவிக்கப்பட்டுள்ளன.



குழந்தைகள்,மகளிர் பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம் எனவும்  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர் இதில் முன்னாள்  எம்எல்ஏ பலராமன்  நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன்  பள்ளி தலைமை ஆசிரியர் ரஜனி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தன் வழக்கறிஞர்கள்உட்பட பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள்  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments