திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டில் நாலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அருட்பீடம் சார்பில் தையற்களை பயின்ற 11 மகளிர்க்கு ஜெயா கல்வி அறக்கட்டளை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழாவும் மத்திய அரசின் பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் கல்வியகத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவும் நடைபெற்றது.
10,12 ஆம் வகுப்பு,ஐடிஐ, பாலிடெக்னிக், மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த விளக்கவுரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சவுரி ராஜன் வரவேற்றார்.
மத்திய அரசின் பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியகத்தின் மூலம் பயன்பெற்ற அத்திப்பட்டு அருணோதயா நகர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் 5 பேர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.அவர்களுக்கு சேர்மன் ரவி சார்பில் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டது. புதிதாக வந்த இளைஞர்களுக்கு திட்டத்தின் மூலம் எவ்வாறு பயனடைவது என்பது குறித்து மத்திய அரசின் பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியகத்தின் பணியாளர் சித்தார்த்தன் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அருட்பீட பொறுப்பாளர்,டிவிஎஸ் ரெட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி,தன்னார்வலர்கள் ஸ்ரீராம்,அத்திப்பட்டு சாம்ராஜ்,ரங்கராஜ்,சசி பாபு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.


0 Comments