கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு கெங்கையம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்



கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு கெங்கையம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நிகழ்வு நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகம் கடந்த 28 தேதி பந்தக்கால் 5 தேதி முதல் கால பூஜை மங்கள இசை தேவதா அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம்,ஷோடச மஹாலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோபூஜை, தனபூஜை, சிவசாச்சாரியார் தசவித ஸ்நானம், அக்னி சங்கிரஹணம், யாகசாலை நிர்மானம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், இரண்டாம் - மூன்றாம் காலை பூஜையும், விஷேச சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், வேத பாராயணம், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், கால யாகசாலை பூஜைகள், தத்வார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர்சாஹூதி, வேத நாத உபச்சாரங்கள், த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதலும் 7 தேதி நேற்று நான்காம் கால பூஜை ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலய விமான கோபுரத்திற்கு ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள்,ஸ்ரீ துர்கையம்மன், அருள்மிகு கெங்கையம்மன் ஆலயத்தின்  நவகிரஹங்களுக்கு புரோகிதர்கள் அனைத்து கோயில்களின் வலம் வந்து ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீரை  சின்ன ஒபுளாபுரம், பெரிய ஒபுளாபுரம், காய்லர்மேடு, ஈச்சங்காமேடு, வெள்ளையளிமேடு, எளாவூர், நரசிங்கபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமங்கலிகள் மற்றும் சிறுவர்கள் பெரியவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். 



இவ்விழாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதும் மேற்கண்ட அருள்மிகு கெங்கையம்மன் இரவு திருவீதி உலா சென்று வானவேடிக்கையுடன் நடைபெற்றது இந்த விழாவினை ஊர் பெருந்துமைக்காரர் மற்றும் நிர்வாகிகள் இளைஞர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.



Post a Comment

0 Comments