திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிசார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தாட்கோ,தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம், வீடு நகர்ப்புற வளர்ச்சி துறை,சமூக நலத்துறை,மகளிர் மேம்பாட்டு துறை,தொழிலாளர் நலத்துறை,வருவாய்த்துறை,நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கினர்.
ஆதார் கார்டு மாற்றுதல்,திருத்துதல், குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,நல வாரியத்தில் பதிவு,மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பதிவுகள் அதற்கான தீர்வுகள் பெறப்பட்டது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி. செயல் அலுவலர் ம.பாஸ்கரன். முன்னிலையில் நடைபெற்ற முகாமினை அரசு துறை அதிகாரிகள், துப்புர பணியாளர்கள்.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



0 Comments