போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்



திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பள்ளி கல்வித்துறை சார்பில் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தனியார் வங்கி அருகே துவங்கிய இந்த பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.



இதனைத் தொடர்ந்து தனியார் ஆதரவு இல்லம் சார்பில் போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடி படையினர் நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், மாணவியர்களிடம் எடுத்துரைத்தனர்.



இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தவெக பொருளாளர் கிருபாகரன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சுஜித், கிழக்கு ஒன்றிய செயலாளர் விமல், வடக்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார்,தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இர்ஷாத், மாவட்ட வழக்கறிஞர் அணி ரிஸ்வானா, மாவட்ட மகளிர் அணி சோனியா, உள்ளிட்ட நிர்வாகிகள்,மற்றும் காவல்துறையினர், ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments