பொன்னேரி துணை கோட்டம் பிரிவு.கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள் ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, 'கடந்த 20.ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக வும், தமிழ்நாடு அரசு தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பேரிடர் காலங் களில் உயிரை துச்சம் என நினைத்து மக்களுக்கு மின்சாரம் கிடைத்திடும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வந்ததாகவும், குறைந்த ஊதியத்தில் தங்களால் குடும்பத்தை நடத்த முடிய வில்லை என வேதனை தெரிவித்தனர். மின்வாரியத்தில் பெரும்பாலான பணிகளை 21 பிரிவு கொண்ட..ஒப்பந்த தொழிலாளர்கள் மேற் கொண்டு வருவதாகவும் அரசு இதனை கவனத்தில் கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை முழுக்கங்கள் ஏற்படுத்தினர் .


0 Comments