திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆவூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் பொன்னேரி எம்எல்ஏ எம்எஸ் ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பின்னர் பேசிய அவர் காற்றில் பரவக்கூடிய நோய் எனவும் ஒரு மாத காலம் மாவட்ட முழுவதும் முகாம் நடைபெறுவதாகவும் கால்நடைகளுக்கு வருடத்தில் இரண்டு தடவை. கண்டு குட்டிகளுக்கு 45 நாட்கள் முதல் தடுப்பூசி போட வேண்டுமெனவும் கண்டிப்பாக கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது அப்பகுதியில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள். விவசாயிகள் மாட்டை வெட்டி விடுவதாக கையில் மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தனர் இடுகுறிப்பு மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்ததாவது புறம்போக்கு இடங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகள் பயிர்களை மாடுகள் சென்று மேய்வதால் கால்நடையை வெட்டி விடுவதாகவும் இதுவரை கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்பட்டுள்ளதாகவும் மாடுகள் மேய்வதற்கு இடம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர் இதில் மண்டல இணை இயக்குனர் மோகன் கால்நடை புலனாய் பிரிவு உதவி இணை இயக்குனர் சுபஸ்ரீ கால்நடை உதவி மருத்துவர் சித்ரா குமரகுருபரன் ஷோபனா மற்றும் ஆய்வாளர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தனசேகர் பலர் கலந்து உள்ளனர்.



0 Comments