புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றியம் காரையூர்,சடையம்பட்டி,ஆலவயல்,வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கருப்பசாமி தலைமையில் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்மணிவண்ணன்,இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற பல திட்டங்களை வழங்கி வருவதாகவும் தமிழ்ப்பள்ளியே நம் தேர்வாக உள்ளது என்றும் மாணவச்செல்வங்களிடையே அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி இலுப்பூர்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன்,பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜீ,பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியைகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் இரா.பாஸ்கர்





0 Comments