கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பெரியசாமியின் 70-வது பிறந்தநாள் விழா..... எம்.பி சசிகாந்த் செந்தில், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நினைவு பரிசுகளை வழங்கினர்.....


திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவரும்,மூத்த நிர்வாகியுமான எஸ்.எஸ்.பெரியசாமியின் 70-வது பிறந்த நாள் விழா கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன்,ஆகியோர் கலந்துகொண்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ். பெரியசாமிக்கு மாலை அணிவித்தும், கேக்வெட்டியும், நினைவு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பேசும்போது காங்கிரஸ் பேரியக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றியவர் பெரியசாமி, இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அதே வேளையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாவட்ட நிர்வாகிகள், மதன்குமார், மதனகோபால், பொன்னேரி அமரன்,திமுக ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட பொருளாளர். ரமேஷ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஒன்றிய துணைச் செயலாளர் மஸ்தான்.முன்னாள் நகர செயலாளர் பிரேம், ராமு ஆனந்தன்.உள்ளிட்ட திமுக காங்கிரஸ். நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments