இன்றைய ராசி பலன் 05-11-2022
மேஷம் ராசிபலன்
நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாக்க வாதி. எனவே, நீங்கள் அந்த திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டிய நேரம் இது. எனவே, அவற்றைச் சரி செய்து கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நேசிக்க முடிந்தால், அது நல்லது. உங்கள் 'அற்புதமான' யோசனையில் சந்தேகம் வரும் போது, உங்கள் முன்னேற்றத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள். வெறுப்பு உங்கள் கோபத்தை அதிகரித்து விடலாம். ஆனாலும், மற்றவர்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளில் உங்களுக்கு உதவக்கூடிய சில எண்ணங்களைப் பெறக்கூடும்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் நிறைவற்ற வேண்டிய விஷயங்களின் பட்டியலைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல், இந்த நாளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாக விஷயங்களைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் அடுத்த நகர்வை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். இன்று, உங்களது முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வரவில்லை என்று நீங்கள் உணரும் போது, பொறுமையிழந்து இருப்பதால் மட்டுமே உங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை, உங்களுக்கு வெற்றி மெதுவாக கிடைதாலும், அந்த வெற்றி பத்து மடங்கு இனிமையானதாக அமையும்.
மிதுனம் ராசிபலன்
வாழ்க்கையில் நீங்கள் மனச்சோர்வடைந்த சூழ்நிலைகளில் கூட, உங்களை உற்சாகப்படுத்திய ஒரு சிலர் இருப்பார்கள். இன்று அவர்களைப் பாராட்டுங்கள். இன்று நீங்கள் பார்க்கும் எல்லாமே அழகாக இருப்பதைக் காண்பீர்கள். அது ஒரு நபராகக் கூட இருக்கலாம், அவரால் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்று நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று உற்றுப் பாருங்கள்.
கடகம் ராசிபலன்
நீங்கள் குறைவாக கவலையடைய விரும்பினால், நீங்கள் இன்னும் அதிகமான காரியங்களைச் செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களை கச்சிதமாக செய்து முடிப்பதற்கு, நீங்கள் மனக்குழப்பம் மற்றும் பயத்தை விட்டொழிக்க வேண்டும். உங்களது வசீகரமும், சமநிலையும் சில புதிய வாய்ப்புகளைப் பெற உதவும். ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று ஒரு சிறந்த நாளாக அமையும். உங்களது வாழ்க்கையில், மற்றவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து அதை அதிகம் பாராட்ட வேண்டும். மேலும், இன்றைய பொழுது அவற்றைக் செய்து காட்ட ஒரு நல்ல நாளாக அமையும்.
சிம்மம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு ஒருவரின் கவனத்தை ஈர்த்துள்ளது, அதற்காக உங்களுக்கு விரைவில் வெகுமதி கிடைக்கலாம். நீங்கள் ஒரு மாணவர் அல்லது தொழில்முறை பணியாளர் அல்லது வீட்டு வேலையைச் செய்யும் அம்மாவாகவும் இருக்கலாம், உங்களது வருவாய் விரைவில் உயர உள்ளது. உங்கள் வாழ்க்கையில் சிறிய அளவிலான எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. உங்களை விமர்சிக்கும் நபர்களிடமிருந்து, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல், அவர்களது நட்பைத் துண்டிக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ உங்களைக் காயப்படுத்தியவர்களுடன் சமாதானமாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
சில சிக்கல்களை உருவாக்குபவர்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை தருவதையே அவர்களின் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். நீங்கள் ஒரு பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும், நீங்கள் இப்போது உங்களது பொறுமையினை இழக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அங்கேயே நிலைத்திருங்கள். ஏனென்றால், அங்கிருந்தே விஷயங்கள் சிறப்பாக மாறும். நீங்கள் நினைப்பதை விட, நிச்சயமாக உங்களது விடாமுயற்சி விரைவில் பலனளிக்கும். இன்று, எந்தவிதமான மோதலுக்கும் இடமில்லை. அமைதியை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை வளர்க்கும் விஷயங்களைச் செய்யுங்கள். உங்கள் சொந்த நலனுக்காக புறங்கூறுபவர்களையும், அவர்களின் விமர்சனங்களையும் புறக்கணியுங்கள்.
துலாம் ராசிபலன்
நீங்கள் வாழ்க்கையையினையும், அதன் சிக்கல்களையும் மிக ஆழமாகத் தேடிப் பார்த்த நேரங்கள் உள்ளன. மாற்ற வேண்டிய நேரம் இதுவாகும். கொட்டிய பாலைப் பற்றி கவலைபடாமல், வாழ்க்கையை வளமாக்கும் நேரம் இதுவாகும். நன்றியுணர்வு என்பது நீங்கள் மறந்துவிடுகின்ற ஒன்று. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு உதவிய நபர்களுடன் மீண்டும் பழகுங்கள். எங்கள் வார்த்தையினைப் பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!
விருச்சிகம் ராசிபலன்
கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவரிடம் மன்னிப்பு கேட்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மன்னிப்பு கேட்பதால், நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வெளிச்சம் காட்டும் விளக்காக இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்கப் பயப்பட வேண்டாம்.
தனுசு ராசிபலன்
உங்கள் உணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவற்றை நீங்கள் சமநிலைப்படுத்த வேண்டும். இன்று, நீங்கள் சொல்வதற்கு ஒரு முக்கியமான முடிவு காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து வருகிறீர்கள். நீங்களே கவனமாக இருக்கவில்லை என்றால், அது உங்கள் உடல்நலத்தைச் சிக்கலில் ஏற்படுத்தும். எனவே, நம்பிக்கையுடன் இருங்கள். சரியாகச் சாப்பிடுங்கள். இன்று முதல் உங்களை மேம்படுத்துங்கள்.
மகரம் ராசிபலன்
இன்னும் கொஞ்சம் தைரியமாக இருப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முன் இருக்கும் சவால்களைத் தாண்டி, நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் உங்களை ஓய்வில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று உங்களைத் புதியதாகக் கவர்ந்தால், அதில் வெற்றிபெற முடியாது என நீங்கள் உணரும் போது, அதனை செய்வதை கைவிடுங்கள். தைரியமான முடிவுகளும் மற்றும் சில விஷயங்களில் புதிய அணுகுமுறைகளும் உங்களுக்குத் தேவையானவைகள் ஆகும்.
கும்பம் ராசிபலன்
இன்று, உங்களது வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருங்கள். உங்களுக்குள்ளேயும், மற்றவர்களோடும் சமாதானமாக இருங்கள். ஒழுக்கமோடு இருங்கள். மற்றவர்கள் உங்களை எந்த அளவிற்கு காயப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகுங்கள். ஆன்மீக உணர்வோடு இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மேலும், இந்த அனுபவத்தின் முடிவிலே நீங்கள் முழுத்திருப்தி அடைவீர்கள். உங்களது ஆன்மீக நலனுக்கு மன்னிப்பு அவசியம். எனவே, நீங்கள் உங்களுக்குள்ளும், மற்றவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், சுமூகமாக பணியைச் செய்யலாம். உங்கள் சகா ஊழியர்களுடன் நல்ல முறையில் பேசி பழகத் தயங்க வேண்டாம். இப்படிப் பேசுவதை அவர்களும் பாராட்டுவார்கள். இன்று அமைதியான மனதுடன் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
No comments