பொங்கல் பரிசு தொகுப்பு 10 ஆண்டுகளுக்கு பிறகு சேலை,வேட்டி டிசைன்கள் மாற்றம்...


பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கிவருகிறது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கலுக்கு வழங்கப்படும் சேலைகள் மற்றும் வேட்டிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது 15 வண்ணங்களில் சேலைகளில், 5 டிசைன்களில் வேட்டிகள் அவரிடம் வழங்கப்பட்டன. இந்த வண்ணச் சேலைகள் பெண்கள், ஆண்கள் தினசரி பயன்படுத்தும் வகையில் உள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றம் இன்றி தொடர்ந்தது. இந்த நிலையில் இம்முறை மு.க. ஸ்டாலின் அரசு இதில் மாற்றம் கொண்டுவர உள்ளது.
2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments