இன்றைய ராசி பலன் 12-11-2022
மேஷம் ராசிபலன்
மற்றவர்கள்உங்களைப்பாராட்டுவதைக்காதுகொடுத்துக்கேளுங்கள். நீங்கள் பேசும் கனிவான வார்த்தை, உங்களை நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும். அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நினைத்தாலும் கூட, உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் விரைவில் நல்ல பலனைத் தரும். உங்கள் மனதில் ஒரு புதிய முயற்சி தோன்றினாலும், அதை வெளிக் கொண்டு வர நீங்கள் தயங்குகிறீர்கள். ஏனெனில், நீங்கள் தேவையில்லாத காரணங்களுக்காக பயப்படுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். மேலும், புதியமுயற்சிகளைத்துவங்குங்கள்.
ரிஷபம் ராசிபலன்
இன்று உங்கள் தாராள மனப்பான்மையால் சிலர் பயனடைவார்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து நல்ல விஷயங் களுக்காகவும், அதைச் செயல்படுத்திய நல்ல மனிதர்களுக்கும் நன்றியுடன் இருங்கள். தேவைப்படுபவர்களிடம் பரிவு காட்ட மறக்காதீர்கள். பெரிய பணிகளைத் தொடர்ந்து செய்வது கடினமாக இருக்கும், இந்த பணிகளின் போது சிறிய ஓய்வு எடுப்பது புத்திசாலித்தனமாகும்.
மிதுனம் ராசிபலன்
அமைதியாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும், உடனடி வெளிப்பாடாகவும் இருப்பதுஉங்களுக்குத்தெரியும்.உங்கள் மனநிலையை அடக்கி ஆளாமல் விட்டு விட்டால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து வகையான மனக்கசப்பையும், அதிருப்தியையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.உங்களைப்பாதிக்கும்பிரச்சினைகளைக்கண்டறியவும். இன்று, உங்கள் நண்பரிடமிருந்தோ அல்லது உங்களுடைய சரியானகூட்டாளரிடமிருந்தோநீங்கள் ஆறுதலையும் தீர்வுகளையும் பெறுவீர்கள். கோபத்தினால் நீங்கள் செய்யும் தவறுகளை எவ்வாறு தடுப்பது என்று, உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய நபர்களிடமிருந்துபதிலைப்பெற்றுக் கொள்ளுங்கள்.
கடகம் ராசிபலன்
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஏனென்றால், சில புதிய வாய்ப்புகள் விரைவில் உங்கள் கதவைத் தட்டும். நீங்கள் உடனடியாக வெற்றி பெற்றுவிட மாட்டீர்கள். மாறாக, உங்களை மொத்ததில் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு, நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உந்திச்செல்ல வேண்டும். நீங்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டால், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். இன்று, உங்களின் சமூகத்தொடர்புகள் மிகச்சிறந்த விதத்தில் அதன் பயன்களைப் பெற்றுத்தரும்!
சிம்மம் ராசிபலன்
நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க விரைந்து எடுப்பதைத் தவிருங்கள். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, உங்களுக்கு முக்கியம் என்று கருத்தும் விஷயங்களைப் பற்றிப் படியுங்கள். உங்கள் வழியில் நிறைய நல்ல விஷயங்கள் வர உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் புத்திசாலித்தனமும், உண்மைத் தன்மையும் நிச்சயமாக உங்களுக்குப் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஓய்வெடுக்க நேரம் எடுத்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
‘அதுவாகவே நடக்கும்’ என்னும் உங்களது எண்ணத்தை மறந்து விடுங்கள்! நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். எனவே, அதற்காக அதிகமாக உழையுங்கள். புதுமையினை புகுத்தும் எண்ணம் தான் உங்களின் உந்து சக்தியாக இருக்கிறது. எனவே, அதில் நிலைத்திருங்கள். சாதாரணமாக வாழ முயற்சிக்க வேண்டாம். ஆனாலும், உங்களது வேலைக்கும், ஆரோக்கியத்திற்கும் இடையில் எல்லையினை வரையறுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நன்றாக சாப்பிடுவதை உங்களது தனிப்பட்ட விதத்தில் செய்து முடிக்கவேண்டிய விஷயமாக மாற்றி, ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். சிந்தியுங்கள். மேலும், ஆலோசனைகளைப் பெற்று, உங்கள் கூச்ச சுபாவத்தை விட்டொழியுங்கள்.
துலாம் ராசிபலன்
ஓயாமல் ரீங்காரமிடும் வண்டைப் போல, எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் அணுகுமுறை உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, மற்றவர்களின் தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி, தெளிவற்ற உள்ளுணர்ச்சி அல்லது வதந்திகளை நீங்கள் கேட்டால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். சந்தேகத்தின் பலனை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் நோய்வாய் பட்டு இருந்தால் அது உங்களுக்கு மனதில் கவலையை உண்டாக்கலாம். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், இப்போது உங்களது கவனிப்பு அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்.
விருச்சிகம் ராசிபலன்
யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது உங்கள் குடும்பமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். ஒருவேளை அந்த நபருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால், அந்த வாய்ப்பை வழங்குங்கள், ஆனாலும், மனக்கண்ணால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
தனுசு ராசிபலன்
இது ஒரு அற்புதமான பயணத்திற்கான நேரம், எனவே அந்த பயணத்திற்குக் கொண்டு செல்லும் பையை வெளியே எடுங்கள். இதை சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பயணமானது எந்த ஒரு தொழிநுட்ப கருவிகளும் இல்லாத பயணமாக இருக்கட்டும்! இது நிச்சயமாக உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். மேலும், இது உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களது நீண்ட கால எதிரி உங்கள் உதவியை நாடுவார், அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத் தரும்.
மகரம் ராசிபலன்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிட முடிவு செய்யுங்கள். உங்கள் மனத்தை நேர்மறையான விஷயங்களில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள்சவால்களைப்புத்திசாலித்தனமாகத்தேர்வு செய்யுங்கள். உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லாத விஷயங்களுக்குப் பின்னால், உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் புதிய வாய்ப்புகளுக்கு இன்னும் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை அடைய இன்றுஉங்களுக்குக்கிடைக்கும் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்தவை அல்லது எதிர்மறையான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பலவீனமான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களது உணர்ச்சிகள் மற்றும் ரகசியங்களை மற்றவர்களை நம்பி கூறுவதற்கான நாள் இது இல்லை. திடீரென உங்கள் இதயம் உடைந்து போகலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் உங்களுடன் இருந்தால், அவர்கள் உங்களுக்கு அதிகளவிலான மகிழ்ச்சியை அளிப்பார்கள்.
மீனம் ராசிபலன்
உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கான மற்றொரு வாய்ப்பை ஏற்படுத்தும் உங்கள் தெரிவானது, உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்துள்ளது. அதை மிதமாகக் கொள்ளுங்கள் மாறாக, அதன் கடைநிலைக்கு மேலே செல்ல வேண்டாம். சிறிய, நம்பகமான முன்னேற்றங்கள், ஒவ்வொன்றும் ஒரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாகும். உங்களது பயிற்சி, பணி அல்லது வாழ்க்கையின் குறிக்கோள்களில் கூட, சில அதிர்ஷ்டமான விஷயங்கள் உங்களை நாடி வரப்போகின்றன.
No comments