புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குருஞ்சாவல் பகுதியில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியரான கருப்பையா(61) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பையா அதே பகுதியில் வசிக்கும் முத்துக்கருப்பன்(54), கருப்பன் ஆகியோருடன் முக்கண்ணாமலைபட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் எதிரே இருக்கும் கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து டீ குடித்து கொண்டிருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனரான மணிவண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments