அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம்

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் பழனியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 பேர் தனியார் ஆம்னி பேருந்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை அரசு பேருந்து ஓட்டுனர் முந்துவதற்கு முயற்சி செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதியது.

இதனால் பின்னால் வந்த ஆம்னி பேருந்தும் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்த்திகேயன், அழகர்சாமி, பொன்ராஜ், முத்துசாமி ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் தனியார் ஆம்னி பேருந்தில் வந்த விஜயகுமார், ராதாதேவி, லட்சுமி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments