எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.... காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்....

 கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஜஜினா பீபி (23). 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

 ஆனால் அவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments