மதுரை பாண்டி கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் - MAKKAL NERAM

Breaking

Monday, December 26, 2022

மதுரை பாண்டி கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

 

மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment