புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடத்தப்பட்டது.அழகியநாட்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற கபாடி போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.
பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்ட கபாடி போட்டியின் முடிவில் சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதில் முதல் பரிசினை சிவகங்கை மாவட்டம் என்.புதூர் அணியினருக்கு ரூ.45,045, அதற்கான வெற்றிக்கோப்பையையும், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.30,045, அதற்கான வெற்றிக்கோப்பையை சிவகங்கை மாவட்டம் பரியாமருதுபட்டி அணியினரும், மூன்றாவது பரிசுத்தொகை ரூ.20,045 மற்றும் அதற்கான வெற்றிக்கோப்பையை புதுக்கோட்டை அண்ணாநகர் அணியினரும், நான்காம் பரிசுத்தொகை ரூ.10,045 புதுக்கோட்டை மாவட்டம் கருப்புக்குடிப்பட்டி அணியினரும் பெற்றுச்சென்றனர்.விழாவில் திமுக தெற்கு ஒன்றியக்கழகச்செயலாளர் அடைக்கலமணி, நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆலவயல் சாமிநாதன், கொன்னையூர் குணசேகரன், செந்தில்குமார், முகமது ஆரிப், கதிரேசன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் திருமயம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, திருக்களம்பூர் கருணாநிதி, ராபர்ட் அரவிந்த் உள்ளிட்டோர் கபடி விளையாட்டு போட்டியினை ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்நிகழ்வில் தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய நகர கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு அணிசார் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான காவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்




0 Comments