புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொது மக்களின் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய விடாமல் தடுத்தல், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெண் என்று பாராமலும் சக அலுவலர்களையும் ஒருமையில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தல், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டத்தின் தீர்மான நோட்டை பறித்து தகராறு செய்வதோடு ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த விடாமல் தடுத்து வரும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் குழந்தைச்செல்வனை கண்டித்து அறந்தாங்கியில் ஆவணத்தாங் கோட்டை, மங்களநாடு,அமரசிம்மேந்திரபுரம்,நாகுடி, மன்னகுடி, ஆயிங்குடி அரசர்குளம், மறமடக்கி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊரட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன் தலைமையில் அறந்தாங்கி அண்ணா சிலையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அறந்தாங்கி போட்டாச்சியர் சொர்ணராஜிடம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் தடுத்து வரும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தனர்.


0 Comments