பொன்னமராவதியில் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே.வைரமுத்து தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் நினைவு நாள் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ஆம்‌ ஆண்டு நினைவு தினத்தையொட்டி  பொன்னமராவதி ஒன்றிய,பேரூர் கழகத்தின் சார்பில் மௌன‌ ஊர்வலம்‌, அம்மையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து தலைமையில் புதுவளவு பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக அஇஅதிமுக கட்சி அலுவலகம் சென்று அங்கு  அலங்கரிக்கப்பட்ட அம்மையார் செல்வி ஜெயலலிதா திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட அதிமுக நிர்வாகி குமாரசாமி பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலை முருகேசன்,பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன்,மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலவயல் சரவணன்,மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன், மாவட்ட, ஒன்றிய,நகர,கிளை கழக நிர்வாகிகள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினர்.

இரா.பாஸ்கர் செய்தியாளர்


Post a Comment

0 Comments