வேற லெவல் “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” ட்ரைலர் இதோ….


நடிகர் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வந்துவிட்டார். அதன்படி, இவர் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்”. காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்துள்ளனர்.படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படி இருக்கிறது. அங்கங்கே இதற்கு முன்பு வடிவேலு செய்த சிறந்த நகைச்சுவை காட்சிகளும் வருகிறது. எனவே ட்ரைலரை வைத்து பார்க்கையில், படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை  சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments