கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை நடத்தும்; மார்கழியில் மாபெரும் மக்களிசை திருவிழா!

 


கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை நடத்தும் மார்கழியில் மாபெரும் மக்களிசை திருவிழா!!! 25.12.2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது.சேவா ரத்னா டாக்டர் க.ரவிச்சந்திரன் தகவல் கலாச்சாரம் காக்க கலைகளை மீட்டெடுப்போம் என்ற வகையில் முதலாமாண்டு பாரம்பரிய கிராமியக் கலைகளையும், கிராமியக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இவ்விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தும் வகையிலும், பாதுகாக்கும் விதமாகவும் ஆவணப் படம் தயாரிக்கப்பட இருக்கிறது.இளம்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.அனைத்து கலைஞர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். கலைக்குழுக்களும் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் தனிநபர்/கலைக்குழுவினருக்கு முறையே 1,2,3 பரிசுகளும்,போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சர்வதேச தேச அளவில் பங்கு பெறலாம். இசைவிழாவில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெரும் கலைக்குழு மற்றும் தனிநபர் தங்களின் விபரங்களை விரைவில் பதிவு செய்யவேண்டும்.மேடைநிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவ்விழாவில் கலைத்துறை மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு விருதுகளும், மூத்த கலைகளை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழாவும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது.விழா பற்றி தெரிந்து கொள்ள : காரியாபட்டி டாக்டர் க.ரவிச்சந்திரன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிராமியக் கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை. காரியாபட்டி.626106.விருதுநகர் மாவட்டம்.தொடர்பு எண்:+919360595901

Post a Comment

0 Comments