தொட்டியம்பட்டி சாலையில் தடுப்பு வேலி அமைக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு அக்கிராம இளைஞர்கள் கோரிக்கை

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி சாலையில் தடுப்பு வலி அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியிலிருத்து மதுரைக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழும் தொட்டியம்பட்டி சாலையின் இருபுறமும் குறுகிய சாலையுடன் கண்மாய் இருப்பதால் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் நிலை உருவாகி உள்ளதென்றும்.மேலும் இக்கிராமத்தின் சாலை வழியாக வார்பட்டு, பிரான்மலை, சிங்கம்புணரி வழியாக மதுரை மற்றும் நத்தம், திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையாகவும், வேந்தன்பட்டி,நெற்குப்பை வழியாக திருப்புத்தூர் செல்லும் சாலையாக திகழ்வதால் நெடுஞ்சாலைதுறையினர் குறுகிய சாலை, இருபுறமும் கண்மாய் இருக்கும் தொட்டியம்பட்டி சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைத்துக் கொடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைதுறைக்கு அக்கிராம இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரா.பாஸ்கர் செய்தியாளர்


Post a Comment

0 Comments