பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா சிவா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மையில் பாஜக பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பாஜக தலைமை, திருச்சி சூர்யா சிவா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் எனவும் சூர்யா தனது விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments