மேஷம் ராசிபலன்
புதிய காற்றை உணருங்கள். இன்று, வாழ்க்கை உங்களுக்கு வழங்கிய சின்னஞ்சிறிய, மகிழ்ச்சியான விஷயங்களுக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். கடந்த கால விஷயங்களைக் கடந்த காலத்திலேயே வைத்திருங்கள். விருப்பம் ஒரு நல்ல விஷயம் தான் என்றாலும், அதில் அதீத ஆர்வத்துடன் இருக்காதீர்கள். உங்கள் இலக்கிலிருந்து கவனத்தை இழக்க வேண்டாம். அனுபவம் வாய்ந்த மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் நிறையத் தேவையற்ற பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நிராகரியுங்கள். இன்று, உங்கள் வீட்டில் புதிய யோசனைகள் மற்றும் அம்சங்களுக்கு அதிக இடம் கொடுங்கள். ஒரு மாற்றம் கண்டிப்பாக உங்களுக்குத் தேவை.
ரிஷபம் ராசிபலன்
எவர் ஒருவர் உங்களது ஆலோசனைகளையும், உதவியையும் எதிர் நோக்குகிறாரோ, அவருடன் கரம்கோர்த்து உதவுங்கள். இன்று உங்களது அன்பை அவர்களுக்கு கொஞ்சம் காட்டுங்கள். ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டங்களை சிறந்த முறையில் உருவாக்க ஒரு அசாத்தியமான தேவை உள்ளது. ஒரு நாள் மட்டும் அதற்காக ஒதுக்கி வையுங்கள். உங்களது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளையும், அது சார்ந்த தொழில் நுட்பங்களையும் விட்டுவிட்டு, அமைதியிலும், தியானத்திலும் லயித்து இருப்பதன் மூலம், அழகை அனுபவியுங்கள். சாதாரணமாக இருங்கள். மேலும், உங்களைச் சுற்றிலும் அமைதியைக் காணுங்கள்.
மிதுனம் ராசிபலன்
மற்றவர்கள் உங்களைஆலோசனைகளைக்கேட்டுக் கொள்வார்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பெருமை கொள்ளாதீர்கள். இது நீங்களேஉங்களைப்புத்திசாலித்தனமாகத்தோன்றச் செய்யலாம். இன்று உங்கள் கோபத்தையும் மன அழுத்தத்தையும்கட்டுப்படுத்தவேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். மற்றவர்கள் வருத்தப்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களது ஆர்வத்தை மீண்டும் தூண்டக்கூடிய புதிய முயற்சிகளைப்பற்றிப்பேசுங்கள். புதிய மற்றும் சவாலான முயற்சிகளுடன் நீங்கள் முன்னேற விரும்பினால், அதற்கு ஏற்ற வழியில்பயணிக்கத்தொடங்குங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, உங்களது குடும்பம் தான் உங்கள் மனதில் முதலிடம் வகிக்கிறது. எனவே, நீங்கள் அவர்களின் சந்தோஷங்களை பேணி வளர்பதற்காக நேரம் ஒதுக்குங்கள். உங்களது கடின உழைப்பு உங்களுக்கு பெரும்புகழைப் பெற்றுத்தரும். மேலும், மற்றவர்கள் உங்களின் உண்மையான மதிப்பை உணரத் தொடங்குவார்கள். இன்று, நீங்கள் சற்று பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் மனத்தைக் காத்துக்கொள்ளுங்கள். உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட வேண்டாம். உங்களின் நேர்மையினைப் பற்றி குறைகூறும் நபர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஆனால், சத்தியத்தை மட்டும் இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் இப்போது மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு தெரியாமல் உங்களை மெதுவாக செயல்பட வைக்கிறது. இதனால், நீங்கள், உங்கள் விருப்பத்தையும், செயல்பாட்டையும் இழந்து விடாதீர்கள். ஒருவேளை இது நீங்கள் இதுவரை திட்டமிட்டு வைத்திருந்த பணிக்கான நேரமாக இருக்கலாம். நீங்கள் மென்மேலும் முயற்சிசெய்து, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த முயலுங்கள். இன்று, இது உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.
கன்னி ராசிபலன்
நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற்றியமைக்க இந்த நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். சில சாதகமான கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதலால், இப்போது நீங்கள் சிலவற்றை புதிதாக தொடங்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். அவசரகோலத்தில் முடிவுகளை எடுப்பதைத் தவிருங்கள். அதிலும் குறிப்பாக, நிதி சம்மந்தமானவைகளில் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
துலாம் ராசிபலன்
உற்சாகமாக இருங்கள் மற்றும் இன்று நடக்கும் அனைத்தையும் நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். மோசமான உணவுப் பழக்கம் உங்களை மெதுவாகச் செயல்பட வைக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முதல், ஒப்பீடுகள் மற்றும் தீர்வு காணும் மனப்பான்மை ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு அம்சத்தை (நீங்கள் விரும்பாததை) மேம்படுத்த நாள் ஒதுக்கி வைக்கவும்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் இருப்பிடத்திற்கும், பணிக்கும் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருகிறீர்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அண்மையில் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளீர்கள். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுடன் நீங்கள் செலவிட்ட நேரங்களுக்காக, அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், அவர்களுடன் நீங்கள் செலவிட்ட நேரங்களை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும். உங்களது கனிவான செயல்கள் உங்களுக்கு நல்ல எண்ணத்தை உண்டாக்கும்.
தனுசு ராசிபலன்
வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத்துங்கள், இன்று உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகச் சிந்தியுங்கள். உங்கள் உறவுகளில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளது. நீங்கள் சிறிய விஷயங்களை ஆழமாகத் தோண்டி பார்ப்பதை நிறுத்தி, விட்டுவிட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக உள்ளது. வாழ்க்கையில் போட்டிக்கும், உறவுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
மகரம் ராசிபலன்
உங்களது வாழ்க்கையில் சில விஷயங்கள் உங்கள் ஆற்றலையும், உற்சாகத்தையும் எடுத்துவிடுகின்றன. இன்று, நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு, அவைகள் உண்மையிலேயே போற்றுதலுக்குரியதாக இருக்கும். சில தருணங்களில், எல்லா பொறுப்புகளையும் வேறு யாருக்காவது ஒப்படைத்துவிடலாம் என விரும்பும் சூழ்நிலைகள் உள்ளன. அதை நீங்களே செய்யத் தயாராக இருக்கிறீர்களா என்றும், அல்லது யாராவது உங்களது பிரதிநிதித்துவதை முற்றிலும் எடுத்துவிடலாமா என்றும், நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்களுக்கு ஏற்பட்ட சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்குப் பிறகு, இன்று நீங்கள் மிகவும் திகைத்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள் அதை மாற்ற முடியாது. ஏனென்றால், அது உங்களது எல்லா செயல்பாடுகளையும் பாதித்துள்ளது. பயமும், பதற்றமும் உங்களுக்கு சில மோசமான அனுபவங்களைக் அளித்துள்ளன. இது நீங்கள் நிர்வகிக்கக்கூடிய விஷயங்களை செயல்படுத்துவதற்கு ஒரு மென்மையான அணுகுமுறையாக வேண்டும். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பும் போக்கு உங்களிடம் உள்ளது. இதுவே கடந்த காலங்களில் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக் காரணமாக அமைந்தது. உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள சரியான தருணம் இதுவாகும்.
மீனம் ராசிபலன்
சில நேரங்களில் செயல்களை உங்கள் வழியிலேயே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள், இந்த செயல்களைச் செயல்படுத்தும் போது உங்களுக்கென உள்ள தனிப் பண்புகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம். இது கண்டிப்பாகப் பாராட்டைப் பெறும். தினமும் தொடர்ந்து செயல்படுத்தினால், நாளாக நாளாக அந்த செயல்களும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் பல விஷயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதுபோன்ற அற்ப விஷயங்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முடியாது. புதிதாக ஒன்றை வாங்குவதாக இருந்தாலும், மனதில் தோன்றும் முடிவுகள் தவிர்த்து விட்டு, பணம் எவ்வளவு செலவாகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.













0 Comments