பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11151பெண் வாக்காளர்கள் 1,14489 இதர வாக்காளர்கள் 25 மொத்த வாக்காளர்கள் 2 ,2 5 66 5/ 89.76% சதவீதம் வாக்குகள் பதிவாகின .வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதில் தவெக வேட்பாளர் டாக்டர் எம் எஸ்.ரவி 109836 வாக்குகள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை சந்திரசேகர் 54227.வாக்குகள்.அதிமுக வேட்பாளர் சிறுனியம் பலராமன்51076 வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராசாத்தி6622 வாக்குகள் பெற்றுள்ளனர்.
பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் எம் எஸ் ரவி வெற்றி பெற்றதை தொடர்ந்து பொன்னேரியில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் சிலம்பரசன் அறிவுறையின் பேரில் பொன்னேரி பொறுப்பாளர் ஸ்டாலின் மற்றும் மகளிர் அணி தேவி பட்டாசு வெடித்து இனிப்பு வாங்கி கட்சியினர் நிர்வாகிகள் கொண்டாடினார்.



0 Comments