பொன்னேரி: மறைந்த அதிமுக நிர்வாகி படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாயலூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஓ.எம்.கோவிந்தராஜ்  அதிமுக கிளை செயலாளர் ஆவார் இவர் அண்மையில் மறைந்ததையடுத்து இவரது உருவப்பட திறப்பு விழா ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 



இவ்விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏவுமான சிறுனியம் பி. பலராமன் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாலூர் முத்துக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஏ.பிரகாசம், வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வி.ஜி. கோபி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அத்திப்பட்டு டி.ஜி. தர்மபிரகாஷ், மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன், அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் எல்.ஐ.சி. சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் இலக்கிய அணி செயலாளருமான ரோஜா ராஜா, அதிமுக கிளைச் செயலாளர் ஊரணம்பேடு ரமேஷ், மற்றும் கிராமத்தினர் என பலர் கலந்து கொண்டனர். இப்படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைந்த அதிமுக நிர்வாகி கோவிந்தசாமியின் மகனும் வாயலூர் முன்னாள ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஜி.ராஜேஷ், மனைவி ஆர். நிரோஷா, மற்றொரு மகன் எம்.ஜி. இளையராஜா, மனைவி பொன்னி, மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர். படத்திறப்பு விழா நிகழ்வை யொட்டி ஊரணம்பேடு கிராமத்தில் சோக கானா பாடல் மற்றும் திண்டிவனம் கூத்து நடைபெற்றது.



Post a Comment

0 Comments