• Breaking News

    பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது - அண்ணாமலை பேட்டி

     

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என்னுடைய பாலிசி கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதான் என்னுடைய வாடிக்கை. எங்கு சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும். வாழ்க்கையில் நினைத்தது எல்லா கிடைக்கனும். கட்சியில் இருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியை புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள்; அதற்கான பதில் என்னுடைய மௌனம் தான். பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments