இன்றைய ராசிபலன் 02-02-2023
மேஷம் ராசிபலன்
கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவரிடம் மன்னிப்பு கேட்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மன்னிப்பு கேட்பதால், நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வெளிச்சம் காட்டும் விளக்காக இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்கப் பயப்பட வேண்டாம்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் முன்பே கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புறக்கணித்தால், உங்கள் எதிர்காலத்திற்காக உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டு விடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து, நீங்கள் உயிருடன் இருப்பதற்கு உதவுவார்கள். உங்கள் செலவுகளில் கட்டுப்பாடு தேவை, இல்லையெனில் அதிக செலவுகள் செய்வதை நீங்கள் உணரும் முன்பே செலவுகள் கட்டுக்குள் அடங்காமல் போய் விடலாம்.
மிதுனம் ராசிபலன்
உங்கள் நாள், ஆற்றல் மற்றும் நோக்கத்தில் எழுச்சியை உண்டாகும். உங்கள் செயலில் ஒரு உந்துதல் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை, நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். செய்யும் செயல்களில் முழுமையாகக் கவனம் செலுத்துவது, உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். எனவே, மன அழுத்த மேலாண்மை என்பது உங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தோன்றும் விரக்தியை விலகி விட்டு, பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய முயலவும்.
கடகம் ராசிபலன்
உங்கள் படைப்பு ஆற்றல் பெரியளவில் வெளிப்படும். மேலும், உங்கள் படைப்பாற்றல் இன்று மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் முக்கியமானகாரியங்களைச்செய்வதில் திறமையானவராக இருப்பீர்கள். முழுமையாக உங்கள்திறமையாகச்செயல்படுத்தப்பலவிஷயங்களைக்கூர்ந்து கவனியுங்கள். செய்ததவற்றுக்காகமற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆணவம்காரணமாக மன்னிப்புகேட்காமலிருந்துவிட வேண்டாம். இது நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். அன்பான வார்த்தைகளைப் பேசுவது நிச்சயமாக இன்று உங்களுக்கு உதவும்.அன்பாகப்பேசுவது, இந்த நாளில் நன்மைகளை உண்டாக்கும்.
சிம்மம் ராசிபலன்
யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது உங்கள் குடும்பமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். ஒருவேளை அந்த நபருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால், அந்த வாய்ப்பை வழங்குங்கள், ஆனாலும், மனக்கண்ணால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
கன்னி ராசிபலன்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.
துலாம் ராசிபலன்
நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். இது ஒரு சில நபர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆனால், உண்மையாக உங்களை பின்தொடர்பவர்களுக்கு உங்கள் மதிப்பு தெரியும். எனவே, அமைதியாக இருங்கள்! விமர்சனத்தை லேசாக எடுத்துக் கொண்டு, உங்கள் இலக்குகளை நோக்கிப் பயணியுங்கள். நிச்சயமாக, ஆணவம் மற்றும் அதிக நம்பிக்கையால் குழப்பமடைய வேண்டாம். வயதானவர்களிடம் கவனம் செலுத்துங்கள். அவர்களால் உங்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்க முடியும். உங்களுக்குக் கோபம் வரலாம். அதனால் உங்கள் வார்த்தைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அமைதியான மனதுடன் இருப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
விருச்சிகம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
தனுசு ராசிபலன்
பலவீனமான மனப்பான்மை எதுவும் இன்று உங்களுக்கு ஏற்படாது. நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் இலக்கினைநோக்கிப்பயணிக்க வேண்டும். உங்கள் அடுத்தசெயல்பாடுகளைப்போலவே நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உறவுகள் செய்யும் தவறுகளை திருத்துவதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உங்கள் மனதுடன் பேச விரும்பும்போது, அன்பான வார்த்தைகளுடன் பேசுங்கள்.உங்களுக்குக்கிடைத்தநல்லவற்றைஎண்ணி அனைத்து வாய்ப்புகளுக்கும் நன்றியுடையவர்களாக இருங்கள்.
மகரம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
கும்பம் ராசிபலன்
ஒருபோதும் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வருவதில்லை. நீங்களே அதை தேடிக்கண்டுபிடித்து, அதன் பின்னே செல்லுங்கள். உங்கள் வழியில் செல்லும் இந்த புதிய வாய்ப்பை, நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். உங்களைச் சுற்றிலுமுள்ள கவனச்சிதறல்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையின் கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவாக நின்ற நபர்களிடம் இணக்கமாக இருங்கள். சின்னஞ்சிறு விஷயங்களில் கூட, புலப்படும் அழகியல்களை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள். ஆகையால், உங்களுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை.
மீனம் ராசிபலன்
உங்களிடம் ஒரு அற்புதமான குணம் உள்ளது. அது யாதெனில், இருண்ட அறையிலிருக்கும் ஒரு மனிதரின் முகத்தில் கூட புன்னகையை உங்களால் வரவழைக்க இயலும். இன்று, இதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களது வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது. நிறைய சமயங்களில், உங்களது வார்த்தைகளின் உண்மையான தாக்கத்தை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். ஆனால், உங்களது நன்மைக்காக இதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதை சமீபத்திய சம்பாஷணை உணர்த்தியுள்ளது. கவலையான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது, உங்களை மிகவும் இலகுவாக உணரச் செய்யும். ஆனாலும், உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு யார் நம்பகமானவர் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
No comments