தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆனது நூற்றாண்டை கடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நகராட்சி ஆகும்.பெரியகுளம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகள் பல்வேறு கிராமங்களுக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காலை மாலை என இரண்டு வேளையும்,குடிநீர் வழங்கப்பட்டு வந்தனர்-இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தால் குடிநீர்வழங்கும் பிரதான சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது இதனால் கடந்த சில தர்மங்களாக பெரியகுளம் குடிநீரோடு உப்பு நீரை கலந்து விநியோகம் செய்து வந்தனர்-ஆகவே பொதுப்பணித்துறையும் நீர்வளத் துறையும் பெரியகுளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும் முன் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments