கோவில்பட்டி அருகே அரசு பேருந்து மோதி விபத்து.... இளைஞருக்கு கால் துண்டாகிய சோகம்....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் சௌந்தர்ராஜ்(23) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் மகேந்திரன் (21) ஆகிய இருவரும் இன்று மாலை இளம்புவனம் கிராமத்தில் இருந்து எட்டையபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எட்டையபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் முன்னாள் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதியதில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சௌந்தர்ராஜனுக்கு வலது காலில் கரண்டைக்கு கீழ் முற்றிலுமாக முறிவு ஏற்பட்டு தனியே கிடந்த காட்சிகள் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி இரண்டு இளைஞர்களையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், வங்கி மருத்துவர்கள் முதலுதவி செய்த பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments