ஆன்லைன் கடன் செயலிகளுக்கு கூகுள் விதித்த கட்டுப்பாடு.... - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 11, 2023

ஆன்லைன் கடன் செயலிகளுக்கு கூகுள் விதித்த கட்டுப்பாடு....

 


Online கடன் ஆப்கள் தொடர்பாக அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டு இருக்கிறது. இந்த Online ஆப்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவுசெய்யாததால் வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துவிடுகிறது. மேலும் அதிகமான வட்டி வசூலித்தல், கடன் தொகையை திருப்பி வசூலிக்க மிரட்டல் விடுத்தல், தனிப்பட்ட படங்களை தவறாக சித்தரித்து வெளியிடுவது என Online கடன் ஆப்களானது அத்துமீறி செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆன்லைன் கடன் செயலிகளை கட்டுப்பாட்டிற்குள் கொணர கூகுள் பிளே ஸ்டோர் பாலிசிகளில் மாற்றங்களைச் செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் கடன் வழங்கும் ஆப்கள் தங்களது லைசென்ஸ் பதிவு ஆவணங்களை Google நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து உதவும் வங்கிகள் (அல்லது) நிறுவனங்களிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை கோர கூடாது. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2023 மே 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

No comments:

Post a Comment