• Breaking News

    சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர்

     


    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சிவசங்கரி இவர் திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியவர். எந்த நேரமும் அனுகி பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யக்கூடியவர்.

    இந்த பஞ்சயாத்து துணைத்தலைவராக இருக்கும் மரகதம் மற்றும் அவரது கணவர் முருகனின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முருகன் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் என்பதால் அதிகாரிகளை மிரட்டி கொண்டு பஞ்சாயத்து அலுவலத்தில் உள்ள சேரில் அமைர்ந்து கொண்டு கோப்புகளை பார்த்து வருகிறார். பின்னர் முக்கியமான கோப்புகளையும் எடுத்து செல்வதாகவும் குற்றசாட்டு எழுந்து வருகிறது.

    இதனைதொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் பலமுறை துணைத்தலைவர் மற்றும் அவரது கணவர் முருகனிடம் கூறியும் அவர் அதனை கேட்காமல் பஞ்சாயத்துதலைவர் சிவசங்கரியை அவதூராக பேசி மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலூக காவல்நிலையத்தில் பஞ்சயாத்து தலைவர் சிவசங்கரி புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    திமுக ஆட்சிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூராக பேசிய சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments