தன்னுடைய மகளின் பள்ளி விழாவில் கலந்துக்கொள்ள முடியவில்லை என மேடையில் கண்கலங்கிய ஆட்சியர்


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் செயங்கொண்டம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பிரபாகர் நினைவு மழலையர் தொடக்கப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 48 வது ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. மாடர்ன் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனிவேல் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. வண்ணமிகு ஆடைகள் அணிந்து கரகாட்டம், காவடியாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, கும்மியாட்டம்  மற்றும் சினிமா பாடலுக்கு பள்ளி குழந்தைகள் ஆடிய நடனம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. மேலும் குழந்தைகளின் குத்தாட்டங்களை கண்ட பெற்றோர்களும், குழந்தைகளும் உற்சாக மிகுதியில் ஆடி அசத்தினர். நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர்  அருண்தம்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதல் வழங்கி பாரட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் இன்று தன்னுடைய மகளின் பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெறுகிறது. அவள் போன் செய்து அப்பா நீங்கள் வருவீங்ளா என்று கேட்டாள் ஆனால் என்னால் கலந்துக்க கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த பள்ளி ஆண்டு விழாவில் கலந்துக் கொள்கிறேன் என்று பேசினார். அப்போது மகளின் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ளமுடியவில்லையே  என்ற ஆதங்கத்தில் குரல் உடைந்து தளு தளுத்து கண்கலங்கி பேசினார். இதைக் கண்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், மணிக்கண்டன், கல்வி குழுமத்தின் செயலாளர் மகேஸ்வரி, துணைத்தலைவர் எம்.கே. ஆர். டாக்டர் சுரேஷ், நிர்வாக இயக்குனர் இலக்கியா, பள்ளி முதல்வர் குணவதி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments