காளான் பண்ணை திறப்பு விழா - MAKKAL NERAM

Breaking

Sunday, April 2, 2023

காளான் பண்ணை திறப்பு விழா


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பழையகூடலூர் ஊராட்சியில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி திட்டத்தின் கீழ் மகளிர் குழுவினருக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவுக் காளான் தயாரிக்கும் பண்ணை அமைத்து தரப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் களப்பணியாளர் சிவானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார் பழையகூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன்  குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சோழமண்டலம் கூட்டுப் பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment