ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஒன்றியம் தேமுதிக வை சேர்ந்த முன்னாள் சத்தி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், இக்கரைநெகமம் ஊராட்சி செயலாளர் கே பழனிச்சாமி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் காடகநல்லி எம். ரவிக்குமார் ஏற்பாட்டில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். சரவணகுமார் முன்னிலையில் தங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டார்கள்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சரவணகுமார் பொன்னாடை அணிவித்தும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் கார்டுகளை வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளர் எம். ராஜா மாதவன், கொமராபாளையம் ஊராட்சி செயலாளர் சதீஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


0 Comments