• Breaking News

    மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்கிறது அகவிலைப்படி

     


    ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது.


    இதுகுறித்து  அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா,பிடிஐயிடம் பேசுகையில் “ஜூன் 2023க்கான சிபிஐ-ஐடபிள்யூ(CPI-IW) ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.


    எனினும் மத்திய அரசு மூன்று சதவீதம் அகவிலைப்படி வழங்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அவ்வாறு வழங்கப்பட்டால் அகவிலைப்படி மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்கும்.


    நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் டிஏவை உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று மிஸ்ரா கூறினார்.தற்போது, ​​ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.

    No comments