• Breaking News

    மேக்கிரிமங்கலம் ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் திருக்கோயிலில் ஐந்தாம் ஆண்டு பால்குடம் காவடி அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது



    மயிலாடுதுறை மாவட்டம்  மேக்கிரிமங்கலம்  அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் திருக்கோயிலில் ஐந்தாம் ஆண்டு பால்குடம் காவடி அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது முன்னதாக மஞ்சள் ஆற்றங்கரையில் இருந்து கரகம் பால்குட காவடி புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.



     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை கிராம நாட்டான்மைகள், பஞ்சாயத்தார்கள்,கிராமவாசிகள்,மகளிர் சுய உதவி குழுக்கள்,இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

    No comments