கோவில்பட்டியில் ஆடி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள 24மனை தெலுங்குபட்டி செட்டி உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா இன்று முதல் தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. ஆடிப்பொங்கல் திருவிழா தொடங்கியதை முன்னிட்டு இன்று காலையில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அன்னை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பால அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments