• Breaking News

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜூலை மாத செய்தி மக்கள் தொடர்பு துறையில் வெற்றிக்கதை

     


    நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக சிகிச்சை பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.


    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஏழை எளிய மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை எளிய மக்கள் தரமான உயர் சிகிச்சை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளை அரசு மற்றும் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவமனை மூலம் செயல்படுத்துவதாகும்.


    நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 88,513 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டம் மருத்துவமனைகள், 01 05 அரசு மருத்துவமனைகள், தனியார் 02 மொத்தம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என 08 அங்கீகரிக்கபட்ட மருத்துவமனைகளில் செயல்பட்டுவருகிறது. மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 11,971 நபர்களுக்கு, ரூ. 18.32 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    மேலும் 24.6.2023 அன்று நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமில் 102 புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.


    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடையாள அட்டை எடுக்காதவர்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ. 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் குறைவாக) ஆகிய ஆவணங்களை தயார் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு அலுவலகத்தில் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.


    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கத்தரிப்புலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. புனிதவதி அவர்களின் மகள் தெரிவித்ததாவது:

     வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கத்தரிப்புலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. புனிதவதி அவர்களின் மகளாகிய நான் கல்லூரியில் பட்ட படித்து வருகிறேன். எனது அம்மா கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் என் தாயாருக்கு ஹீமோடயாலிஸிஸ் ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் என் தாயாருக்கு ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டனர். என் தாயார் சிகிச்சைக்கான செலவை தமிழ்நாடு அரசே செலுத்தியது. இதனால் நான்கு நாட்களிலேயே எனது ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சை முடிந்து


    முழு வீட்டிற்கு உடல் ஆரோக்கியத்துடன் திரும்பினார். எங்களைப் போன்றவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்து, மறுவாழ்வு தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த நாகப்பட்டினம் வட்டம், கூத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமதி. சஹருவான் பீவி அவர்கள் தெரிவித்ததாவது


    நான் அந்தப் பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனது வயிற்றுப் பகுதியில் எனக்கு அடிக்கடி வலி ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது மருத்துவர்கள் எனக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். எனது அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போதிய அளவு வருமானம் இல்லாததால் என்னால் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் வீடு திரும்பினேன். அத்தகைய சூழ்நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பலன் பற்றி கூறினார்கள். உடனடியாக நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு, அதே மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு எனக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பணம் செலுத்தியது ஒரு வார காலம் தங்கி சிகிச்சை முடிந்து இப்பொழுது எந்தவிதமான வலியும் இன்றி நலமாக உள்ளேன். எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களின் உயிர் காத்து இத்திட்டத்தினை தந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது. குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை 

    தெரிவித்துக்கொள்கிறேன். 


    தொகுப்பு:-


    மீ.செல்வகுமார்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.


    கா.அண்ணா கலைஞர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.



    மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி 97 88 34 18 34

    No comments