உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் மெஹ்ராஜூதின் (வயது 45). இவரது மனைவி ஷாமா. இதனிடையே, ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த மெஹ்ராஜூதின் தன் மனைவி ஷாமாவை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மெஹ்ராஜூதினை தீர்த்துக்கட்ட ஷாமா திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மெஹ்ராஜூதின் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை ஷாமா தன் கள்ளக்காதலன் அகீப் உடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர், ஷாமா தன் கள்ளக்காதலன் அகீப் உடன் கிராமத்தை விட்டு ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட மெஹ்ராஜூதினின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment